முரசொலி நிலம் குறித்து அவதூறு பரப்பிய பாமக ராமதாஸ் மற்றும் பா.ஜ.க நிர்வாகி மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக ராமதாஸ் கூறியிருந்தார். அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இல்லை என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். பாமக கேட்கும் மூல ஆவணத்தை திமுக இதுவரை வெளியிடவில்லை.