கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்தவர் பிரணவ். பிறவியிலேயே கைகளை இழந்த இவர், சமீபத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து நிவாரண நிதி வழங்கினார். அப்போது, அவர் முதல்வருடன் எடுத்த செஃபி வைரலானது. அடுத்து ரஜினியை பார்க்கணும் என்று கூறியிருந்தார். அவரது ஆசையை ரஜினி இன்று நிறைவேற்றியுள்ளார். அப்போது, ரஜினியுடன் செல்ஃபி எடுத்துள்ளார் பிரணவ்.