நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் மூன்றாவது நாளாக இடைவிடாது கொட்டித் தீர்க்கும் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சுற்றுலா நகரான நீலகிரியில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.