தேனி மாவட்டம் நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர், சுகந்தி. இவர், தனது சகோதரியுடன் சமீபத்தில் டிக்டாக் செயலியில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத நபர் ஒருவர், சுகந்தி மற்றும் அவரது சகோதரியை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கொந்தளித்த பெண்கள், பி.சி.பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கத் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.