2014ல் 229 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2018ம் ஆண்டில் 264 ஆக உயர்ந்துள்ளது என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.966 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பக்கிங்ஹாம், கூவம், அடையாறு வடிகால்கள் ரூ.5,439.76 கோடியில் மறுசீரமைக்கப்படும். முத்திரைத் தாள் வரி 1 சதவிகிதத்தில் இருந்து 0.25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று ஓபிஎஸ் கூறினார்.