நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் படித்து வரும் மாணவி தங்கமலர் நல்லொழுக்கப் பாடப்  புத்தகம் கொண்டு வராததால், ஆசிரியர் ஆதிநாராயணன் பிரம்பால் அடித்தபோது, பிரம்பு உடைந்து அருகில் அமர்ந்திருந்த முத்தரசியின் கண்ணில் குத்தியது. கண்ணில் ரத்தம் வழிந்த முத்தரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.