இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் `பாரம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் மிஷ்கின், "தலைவலியுடன்தான் இந்தப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்த்தபோது என்னை நானே செருப்பால் அடித்ததுபோல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் எனக் கூச்சமாக இருந்தது. படம் பார்த்தவுடன் என் அம்மா அப்பா ஞாபகம் வந்துவிட்டது" என்றார்.