திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவபட்டி புனித அந்தோணியார் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. 700 காளைகள் மற்றும் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற காளை ஒன்று நத்தமாடிபட்டி அருகே கிணற்றில் விழுந்தது. காளையை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

TamilFlashNews.com
Open App