எம்.ஜி.ஆர் நடிப்பில் 1968-ல் வெளியானது ரகசிய போலீஸ் 115. இந்தப் படத்தை பி.ஆர்.பந்தலு இயக்கி இருந்தார். கதாநாகியாக ஜெயலலிதா நடித்திருந்தார். பத்மினி பிக்சர்ஸ் சார்பில் படம் தயாரிக்கப்பட்டது. இந்தப் படத்தை தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றி வெளியிட பத்மினி பிக்சர்ஸ் உடன் இணைந்து பி.சண்முகம் வெளியிடுகிறார். ஏற்கெனவே உலகம் சுற்றும் வாலிபன் உள்ளிட்ட 4 படங்கள் டிஜிட்டலில் வெளியிடப்பட்டது.