கொரோனா மூலம் ஊரடங்கு உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால் திண்டிவனம் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக வந்திருந்த மக்களுக்கு திண்டிவனம் போலீஸார் கொரோனா பற்றிய விழிப்புணர்வை ரேடியோ மூலம் ஏற்படுத்தி வருகின்றனர்.