'தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம். இந்த 21நாள் ஊரடங்கு என்பது விடுமுறையல்ல  உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க அரசு விடுத்துள்ள உத்தரவு. விழித்திரு... விலகியிரு... வீட்டிலேயே இரு என்பதை நாம் அனைவரும் கடைப்பிடிப்போம். அரசின் உத்தரவுகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.