தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் மொத்த மனிதக் குலத்துக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் மனிதக் குலம் இதை எதிர்த்துப் போராட வேண்டும் என ஐ.நாவின் பொதுச் செயலாளர் அண்டோனியோ கட்டெர்ஸ் கூறியுள்ளார். இந்த நேரத்தில் உலகளாவிய ஒற்றுமை மற்றும் நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்