கொரோனா அச்சத்தால் அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு நாடு முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில்  குஜராத்தில் உள்ள ராஜஸ்தான் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பப் போக்குவரத்து வசதி இல்லாததால் சாலை வழியாக நடந்தே செல்கின்றனர். சுமார் 2,000 தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுடன் இடம் பெயர்ந்து வருகின்றனர்.