இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இருப்பவர்கள் 14 நாள்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அதற்கு அடையாளமாக அவர்களின் கையில் ஸ்டாம்ப் குத்தப்படுகிறது. இதற்கு வாக்களிக்கும் போது பயன்படுத்தப்படும் அழியாத மையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இடது கையில்தான் அந்த மையைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.