அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு 3 நாள்களுக்கும் 2 மடங்காக உயர்வதாக அந்த மாகாணத்தின் ஆளுநர்  கூறியுள்ளார். மாகாணத்துக்குத் தேவையான உதவிகள் கிடைக்கவில்லை என்றும் 30,000 வென்டிலேட்டர்கள் தேவைப்படும் இடத்தில் வெறும் 400 வென்டிலேட்டர்களே வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.