வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் வீடுகளில் வேப்பிலை தோரணம் கட்டியும், வாசலில் மஞ்சள் நீர் தெளித்தும் கொரோனாவை அண்டவிடாமல் குடும்பத்தினரைப் பாதுகாத்துவருகிறார்கள். மேலும், வீடுகளைச் சுற்றி ப்ளீச்சிங் நீரைத் தெளித்து சுகாதாரப் பணியினை மேற்கொள்கிறார்கள்.