கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த கோடிமுனை பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற நபர் இறந்தார். அவரது ரத்த மாதிரிகள் நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.