கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், ஊரடங்கு உத்தரவு எதற்காக என்பது குறித்தும் கிராமங்களில் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பாக தண்டோரா மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, வெளியூரிலிருந்து ஊர் திரும்பியவர்கள் குறித்து வார்டு உறுப்பினர்கள் மூலம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் கணக்கெடுக்க தொடங்கியுள்ளனர்.