இந்தியாவில் கொரோனா தொற்றால் 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேரும், கேரளாவில் 118 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.