'நாகர்கோவிலில் 15 வயது சிறுமியை, இரண்டு ஆண்டுகளாக சிறார் வதை செய்த வழக்கில் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ-வான நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இவ்வளவு பெரிய விவகாரத்தில் போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் யாருக்காகவோ காத்திருந்துவிட்டு, பிறகு அவர் கட்சியில் நீக்கப்பட்ட பிறகு பொறுமையாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.  காவல்துறையினர்மீது பல்வேறு அதிருப்திகள் நிலவும் சூழலில், இந்த விவகாரம் அந்தத்துறையின் மீதான நம்பிக்கையின்மையை மேலும் அதிகரித்துள்ளது.

TamilFlashNews.com
Open App