'மாதம்தோறும் இரண்டு பிரதோஷங்கள் வந்தாலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் முக்கியமானது. இதை சனி மகாபிரதோஷம் என்று போற்றுவர். பொதுவாகவே பிரதோஷ வேளையில் செய்யப்படும் நந்தி வழிபாடு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும். சிவாலயங்களில் இந்த நாளில் நந்திபகவானுக்குப் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.இன்று மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை வீட்டில் அனைவரும் சிவபுராணம் பாடி சிவபெருமானைத் துதித்து இந்த சனிபிரதோஷ தினத்தைக் கடைப்பிடிக்கலாம்.

TamilFlashNews.com
Open App