காலாவதியாகும் வாகனப் பதிவுச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாகன பெர்மிட் (அனைத்து வகையானது) உள்ளிட்ட ஆவணங்கள் டிசம்பர் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு பிப்ரவரி 1, 2020 முதல் காலாவதியான ஆவணங்கள் டிசம்பர் 31, 2020 வரை செல்லுபடியாகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App