தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் இ-பாஸ் நடைமுறையை தொடரலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வரும் 29-ம் தேதி முதலமைச்சர் ஆலோசனை நடத்த இருக்கிறார். மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் செப்டம்பர் மாதம் முதல் அளிக்கப்பட இருக்கும் ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.