முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை இன்று காலை 11 மணிக்கு பா.ஜ.க-யில் இணைகிறார். டெல்லி பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் கட்சியில் இணைகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் ஆர்வம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை சில மாதங்களுக்கு முன்னர் தற்சார்பு விவசாயத்தில் கவனம் செலுத்தினார். தொடர்ந்து ரஜினிக்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டு வந்த அண்ணாமலை தற்போது, பா.ஜ.க வில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TamilFlashNews.com
Open App