குட்காவை சட்டமன்றத்திற்கு கொண்டு சென்றதால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. உரிமை மீறல் நோட்டீஸுக்கு எதிராக திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில், குட்காவை சட்டப்பேரவைக்கு கொண்டு வந்ததாக தி.மு.க.வினருக்கு வழங்கப்பட்ட உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.