'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் முல்லையாக நடிக்கும் சித்ராவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் நடந்தது. எளிமையான முறையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சித்ரா மணமுடிக்கப் போகும் மாப்பிள்ளை பெயர் ஹேமந்த் ரவி. சொந்தமாகத் தொழில் செய்துவருகிறார். சித்ராவின் பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணம் இது. வாழ்த்துகள்