கேரள மாநில தலைமைச் செயலகம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது. தலைமைச் செயலகத்தின் நார்த் பிளாக்கிலுள்ள சீஃப் புரோட்டோகால் அதிகாரியின் அலுவலகத்தில் நேற்று மாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், தங்கக் கடத்தல் வழக்கு தொடர்புடைய ஃபைல்கள் எரிந்து நாசமானதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி உள்ளனர்.