கொரோனாவுக்கு எதிராக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பூசி ஆய்வு இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் அந்த ஆய்வை தமிழகத்தில் நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா ஆகிய மருத்துவமனைகளில் இந்த கொரோனா தடுப்பூசி சோதனை நடைபெற உள்ளது எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். சென்னையில் சுமார் 300 பேருக்கு இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படவுள்ளது.