புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் ரயில்வே சுரங்கப் பாதை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கிராமப் பிரதிநிதிகள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். களமாவூரில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.