`நாச்சியார்' பட டீசரில் ஜோதிகா பேசிய வசனம் விமர்சனத்துக்குள்ளானது. இதனால், ஜோதிகா, பாலா மீது நடவடிக்கைக்கோரி இந்தியக் குடியரசுக் கட்சியின் தலித் பாண்டியன் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றம், ‘ஜோதிகா பேசிய வசனத்தால் பாதிக்கப்பட்ட சாட்சிகளின் பட்டியலைத் தர வேண்டும்’ என உத்தரவுப் பிறப்பித்து ஜனவரிக்கு வழக்கை ஒத்திவைத்தது.