ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷாலின் மனு முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்னர் வேட்புமனுவில் முன்மொழிந்த இருவர் மறுத்ததால் நிராகரிக்கப்பட்டது. முன்மொழிந்து பின் மறுத்த 2 பேரும் இன்று மாலை 3 மணிக்குள் தேர்தல் ஆணையரைச் சந்தித்து விளக்கம் அளித்தால் விஷால் மனு மறுபரிசீனை செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.