கழுகுமலையில் நேற்று விடிய விடிய பெய்த மழையில்,கோவில்பட்டி சாலையில் உள்ள பாலம் உடைந்தது. இதனால் கழுகுமலை-கோவில்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது உடைந்த பாலத்தில் லாரி சிக்கி உள்ளது.அந்த லாரியை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.