கடந்த ஆண்டு 10 லட்சத்துக்கு அதிகமாக வருட ஊதியம் பெறுபவர்களுக்கு, சமையல் எரிவாயு மானியம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கார் வைத்திருப்பவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம் கிடையாது என்று விரைவில் அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.