திண்டுக்கல் மாவட்டத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2017-18-ம் கல்வி ஆண்டுக்கான அறிவியல் கண்காட்சி 8 தலைப்புகளில் நடைபெற்றது. இதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 100 பேர் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர். ஒவ்வொரு தலைப்புக்கும் முறையே 1500, 1000, 500 பரிசுத்தொகை வழங்கப்படும்.