விஷால் வேட்புமனுவில் கையெழுத்துப் போட்டுவிட்டு பின்னர், `எங்கள் கையெழுத்தில்லை’ என்று பின்வாங்கிய தீபன், சுமதியை இன்று 3 மணிக்குள் ஆஜர்படுத்த தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி விஷாலுக்கு அறிவுறுத்தினார். இந்நிலையில் அவர்கள் இருவரும் காணவில்லை என்று விஷால்  வேலுச்சாமியைச் சந்தித்து தற்போது முறையிட்டு வருகிறார்.