கன்னியாகுமரியில், ஒகி புயலில் காணாமல்போன மீனவர்களை மீட்டுத் தரக்கோரி, 8 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள், குழித்துறையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக் களத்தில், மீனவ மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும்வரை போராட்டம் தொடரும்’ என்று அறிவித்துள்ளனர்.