ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையம் வரை சென்று நியாயம் கிடைக்க முறையிடுவேன் என்று விஷால் கூறியுள்ளார். மேலும், தனது வேட்புமனுவில் முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்ட ஆதாரம் இருந்தும், தேர்தல் அலுவலரை நான் மிரட்டியதாகப் புகார் கூறுகிறார்கள் என்றார்.