தமிழகத்தில், மாட்டுப்பொங்கல் அன்று திங்கட்கிழமை 15-ம் தேதி மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.