தேனி, வீரபாண்டி காவல் நிலையத்தில் சிறப்பு ஆய்வாளராக வேலை பார்த்தவர் பாபா சிக்கந்தர். அவர், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் காவலர் ஒருவரின் ஒன்பது வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். தற்போது, சிக்கந்தர் தலைமறைவாகிவிட்டார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.