இந்திய ராணுவ தினக் கொண்டாட்டத்துக்கு  முன்னோட்டமாக ஹெலிகாப்டரிலிருந்து கயிறு மூலம் கீழே இறங்கிய ராணுவ வீரர்கள் 3 பேர் கயிறு அறுந்து கீழே விழும் பதற வைக்கும் வீடியோ காட்சி வைரலாகப் பரவிவருகிறது. இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் “எங்களைக் கொல்வதற்கு எதிரிகள் தேவையில்லை' என்று வருத்தப்பட்டுள்ளார்.