வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த சீனிவாசன் பேட்டையில் மின் கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதில் ஏராளமான பொருள்கள் எரிந்து நாசமாகின.