அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை  வருகின்ற 16ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், துணை முதலமைச்சர் ஓபிஎஸ்ஸும் கலந்து கொள்கிறார். கடந்தாண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க வந்த அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ்., மக்களின் எதிர்ப்பால் திரும்பிச் சென்றார்.