பார்களுக்கு அனுமதி கொடுக்க லஞ்சம் பெற்றதாக புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மதிசெல்வம் உள்பட 3 பேரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். ரூ.8,34,500 பணத்துடன் மதிசெல்வம், சொந்த ஊரான திருநெல்வேலிக்கு காரில் புறப்பட்டபோது போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.