இஸ்ரோ தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழரான சிவன் பற்றி முன்னணி மலையாள பத்திரிகையான மனோரமா வெளியிட்ட செய்தியில், ''கன்னியாகுமரியில் பிறந்தாலும் சிவனுக்கு திருவனந்தபுரம்தான் தாய் வீடு. 30 ஆண்டுகளாக  மலையாள மண்ணுடன் கலந்து விட்டவர் சிவன்'' என்று கூறியுள்ளது. அண்டை மாநிலமும் ஒரு தமிழருக்கு உரிமை கொண்டாடியுள்ளது.