தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் கிராமத்தினர் கடந்த 2 நாளாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 43 சிறுவர், சிறுமியர், 142 பெண்கள் உட்பட 257 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர்.