கேரளாவின் கொச்சி துறைமுகத்தில், ஓ.என்.ஜி.சி க்கு சொந்தமாக கப்பல் ஒன்றில் இன்று பயங்கர வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. மீட்பு படையினர் உடனடியாக அதிலிருந்தவர்களை மீட்கும் பணியில் இறங்கினர். எனினும் இந்த விபத்தில் 5 பேர் பலியாயினர். 11 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.