புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நுழைவு வாயிலில் அரசு பேருந்து மோதியது. இதில், பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 'அழகுக்காக பதிக்கப்பட்டிருக்கும் வழவழப்பான டைல்ஸ் மீது மழை பெய்யும்போது, பஸ்ஸில் பிரேக் பிடித்தால், வழுக்கிக்கொண்டு சென்றுவிடுகிறது' என்கிறார்கள் ஓட்டுநர்கள்.