’தென் மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரி வருவாயைக் கொண்டு வட மாநிலங்களை மட்டும் மத்திய பா.ஜ.க அரசு வளப்படுத்துகிறது’ என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை அதிரடியாக விமர்சித்துள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேச கட்சி விலகியது குறிப்பிடத்தக்கது.