சென்னை பாரிமுனையை சேர்ந்தவர், அபிபுல்லா. இவரது 2 மகன்களை நீச்சல் கற்றுக்கொடுக்க மெரினா நீச்சல் குளத்துக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது அவர் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.