தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை காண வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் காலில் விழுந்து பெண் ஒருவர் கதறி அழுதார். ஆளுநர், `கவலைகொள்ள வேண்டாம். அனைவரும் நலம் பெறுவார்கள்' என நம்பிக்கை தெரிவித்தார்.